பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ‘கல்மேகி’ என்ற சூறாவளி காரணமாக பெய்த கனமழையுடன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 58 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்தன.. பல மகிழுந்துகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன.. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன..

சூறாவளி காரணமாக 180 இற்கும் மேற்பட்ட விண்ணுந்துகள் இரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற உலங்குவானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

இந்த சூறாவளி நாளை இரவு வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..