“சுய தொழில் கோடீஸ்வரர்கள்!”… சொந்த முயற்சியால் 22 வயதில் தொழிலதிபர்கள் ஆன இந்திய வம்சாவளி இளைஞர்கள்… வெற்றியின் ரகசியம் இதுதானா?

3 hours ago

அமெரிக்காவின் கலிபோர்னியா சான் ஜோசேவில் உள்ள பெல்லர்மைன் காலேஜ் பிரிபாரேட்டரி பள்ளியில் படித்த 22 வயது இளைஞர்கள் சூர்யா மிதா, ஆதர்ஷ் ஹைரேமத் ஆகிய இந்திய வம்சாவளி நண்பர்களுடன் அமெரிக்கர் பிரெண்டன் பூடி ஆகியோர், சிறு வயதிலிருந்தே தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களாகும் கனவுடன் வளர்ந்தனர்.

சர்வதேச விவாத போட்டிகளில் சந்தித்த இவர்கள், பள்ளி காலத்திலேயே நெருக்கமான நட்பைப் பேணினர். பின்னர் ஆதர்ஷ் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல், சூர்யா மற்றும் பிரெண்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தினர்.

2023இல், படிப்பைத் தொடர்ந்தபடி, சான் பிரான்சிஸ்கோவைத் தளமாகக் கொண்டு ‘மெர்கர்’ என்ற AI ரூட்டிங் பிளாட்பார்மை உருவாக்கினர். இது இந்திய பொறியாளர்களை அமெரிக்க நிறுவனங்களுடன் இணைக்கும் திறன் கொண்டது, ஏ.ஐ. அவதாரங்களுடன் நேர்காணல் நடத்தி, ஓபன்ஏ.ஐ., ஆந்த்ராபிக் போன்ற பெரு நிறுவனங்களுக்கு திறமையைப்  அளிக்கிறது.

இந்த மென்பொருள் தீவிரமான வளர்ச்சியைப் பெற்று, ஃபெலிசிஸ் வென்சர்ஸ் தலைமையில் டென்மார்க், ஜெனரல் காடலிஸ்ட், ராபின் ஹூட் வென்சர்ஸ் போன்றவற்றிடமிருந்து 350 மில்லியன் டாலர் (ரூ.3,100 கோடி) முதலீட்டை ஈர்த்து, நிறுவனத்தின் மதிப்பை 10 பில்லியன் டாலராக உயர்த்தியது.

இதனால், தலா 22 சதவீத பங்கு கொண்டுள்ள இந்த மூவரும், உலகின் இளைய சுயதொழில் கோடீஸ்வரர்களாக உருவெடுத்தனர். இது 23 வயதில் கோடீஸ்வரரான மார்க் ஜூக்கர்பெர்க்கின் சாதனையை முறியடித்து, பாலிமார்கெட் நிறுவனர் ஷேய்ன் கோப்லானை வெளியேற்றியது. 3 பேர் கொண்ட இளைஞர் குழுவால் நடத்தப்படும் மெர்கர், உலகளாவிய திறமை சந்தையை உருவாக்கும் இலக்குடன், AI புரட்சியின் புதிய முகங்களாகப் பிரகாசிக்கிறது.