பறிபோகுமா செல்வம் எம்பியின் தலைமை பதவி.! ஆதாரங்களை வெளியிட்ட ரெலோ முக்கியஸ்தர்

10 hours ago

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனுடையதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று அண்மையில் வெளியாகியிருந்தது.

குறித்த குரல் பதிவில் செல்வம் அடைக்கலநாதனுடன் உரையாடியதாகக் கூறப்படும் ஜெயராம் சுரேஷ் என்பவர் கடந்த மாதம் நீர்கொழும்பு பகுதியில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் தற்போது இது கொலையாக இருக்கலாம் என அப்பிரதேச மக்களும், ரெலோ அமைப்பின் பல முக்கியஸ்தர்களும் சந்தேகங்கள் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த குரல் பதிவுக்கும், குறித்த நபரின் தற்கொலைக்கும் தொடர்புகள் உள்ளதாகக் கூறி பல விமர்சனங்களும், தகவல்களும் வெளியாகியிருந்தததை ஒரு காணொளி மூலமாக நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.

தற்போது குறித்த விடயம் தொடர்பில் மேலும் பல தகவல்களும் எமக்கு கிடைத்துள்ள நிலையில் அவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறது பின்வரும் காணொளி...


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!