துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு!

2 hours ago

மீனவர் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக, துறைமுகங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மீன் தளங்களை அடையாளம் காணும் அமைப்பை உருவாக்க ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் மீன்வளர்ப்பு மேம்பாட்டிற்காக மேலும் ரூ. 100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண தென்னை முக்கோணத்திற்கு ரூ.600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கால்நடை மற்றும் பன்றி இனப்பெருக்கத் திட்டங்களுக்கு ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படும் நிலையில் அதில் அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.