ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு...! கல்வி அமைச்சின் இறுதி அறிவிப்பு

10 hours ago

அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் (06.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஒரு இடைவேளை வழங்குவதா

புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, 5ஆம் ஆண்டு முதல் உயர்தரம் வரை பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும்.  

ஜனவரியில் பாடசாலை நேரம் நீடிப்பு...! கல்வி அமைச்சின் இறுதி அறிவிப்பு | Moe Announced School Hours Extended By 30 Minutes

மேலும், ஒரு பாடவேளை 50 நிமிடங்கள் கொண்டதாக 7 பாடவேலைகள் நடத்தப்படும்.

அத்துடன், முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 11.45 மணி வரையிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 7.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும் நடைபெறும் பாடசாலை நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

மேலும், இரண்டு இடைவேளைகள் வழங்குவதா அல்லது ஒரு இடைவேளை வழங்குவதா என்பதை முடிவு செய்ய பாடசாலை அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.   

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!