அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் 2025 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் (07) முடிவடைகிறது.
கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பமாக உள்ள உயர்தர பரீட்சையை முன்னிட்டு இன்று 7ஆம் திகதியுடன் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
முடிவில் எந்த மாற்றமும் இல்லை
அதன்படி, சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் கட்டம் 2025.12.08 ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.11.24ம் திகதி திங்கட் கிழமை ஆரம்பமாகும்.
இதேவேளை, அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!











