நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் பாதீட்டு உரையில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஜனாதிபதி சுமார் நான்கரை மணிநேரம் பாதீட்டு உரையை நிகழ்த்தினார்.
பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருட இறுதிக்குள் அந்திய செலவாணி 7 வீதமாக அதிகரிக்கும். 2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.  நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு ஈ சேவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும். கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும். 2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர்”
மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் பற்றி எமக்கு தீர்மானிக்க முடியாது.

தேர்தல் முறைமையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுங்கள் என்று எதிர்க்கட்சிகளிடம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார்.  அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.