உம்ரா வழிபாட்டின் போது மக்கா புனித பள்ளிவாசல் அருகே சவூதி போலீஸார் ஒரு பெண்ணையும் எகிப்து நாட்டு யாத்திரிகரையும் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Viral video clip from Makkah’s Grand Mosque shows a security officer confronting pilgrims, pulling a woman and pushing a man. Online debate erupts over whether his actions were justified or harsh. pic.twitter.com/LcKjTjKIPp
— The Siasat Daily (@TheSiasatDaily) November 3, 2025
59 விநாடிகள் நீளமான அந்த வீடியோவில், பாதுகாப்பு பணியாளர்கள் இஹ்ராம் உடை அணிந்த ஆண், பெண் யாத்திரிகர்களை கடுமையாக தள்ளிய காட்சிகள் பதிவாகியுள்ளன. புனித இடத்தில் இத்தகைய நடத்தை நடந்தது குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கோபம் வெளியிட்டு, சவூதி மற்றும் எகிப்து அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
“இஸ்லாத்தின் இரக்கம், மரியாதை என்ற கொள்கைக்கு எதிராக இத்தகைய நடத்தை உள்ளது,” என நெட்டிசன்கள் குற்றம் சாட்டினர். சிலர், “புனித ஹஜ், உம்ரா நேரங்களில் இத்தகைய அவமானகரமான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது வருத்தமளிக்கிறது” என்றும் கூறினர். மற்றொருவர், “இது மனிதநேயமற்ற செயல், இவ்வாறு பெண்களை இழுத்துச் செல்லும் காட்சிகள் புனித மக்காவில் நடப்பது மிகவும் அவமானம்” என பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, ஹஜ் மற்றும் உம்ரா பாதுகாப்புப் பிரிவு சிறப்பு படை விளக்கம் அளித்துள்ளது. வீடியோவில் இடம்பெற்ற நபர் “மச்ஜித் அல் ஹராமின் விதிமுறைகளை மீறியதால்” கைது செய்யப்பட்டதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் கடந்த மார்ச் மாதத்தில் மதீனாவில் உள்ள நபி பள்ளிவாசலில் நடந்த ஒரே மாதிரியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது மக்காவில் நடந்துள்ள இந்த புதிய சம்பவம், புனித தலங்களில் யாத்திரிகர்களின் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
Muthu Kumar
சீனா, பாகிஸ்தான் ரகசியம்..! உலகையே உலுக்கிய ட்ரம்ப்பின் பேச்சு..! அணு ஆயுதப் போர் வந்தால்… பல உயிர்கள் பலியாகியிருக்கும்…!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், அண்டை நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாகக் கூறியிருப்பது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, சீனாவும், பாகிஸ்தானும் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.…
“ஆர்டர்ல மருந்து தான் வரும்னு நினைத்தேன்..!”… ஆன்லைனில் மருந்துகளுக்கு பதிலாக வந்த அதிர்ச்சியூட்டும் பொருள்… உறைந்து நின்ற பெண்… பரபரப்பு சம்பவம்..!!!
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், ஹாப்கின்ஸ்வில்லில் வசிக்கும் ஒரு பெண், ஆன்லைனில் ஆர்டர் செய்த அவசர மருந்துகளை எதிர்பார்த்து தனது வீட்டிற்கு வந்த பேக்கேஜை திறந்தபோது அதிர்ச்சியடைந்தார். புதன்கிழமை இரவு வந்த அந்தப் பெட்டியில் மருந்துகள் இல்லாமல், குளிரூட்டப்பட்ட பேக்கில் மனித கைகள்…











