100 வயதில் பிரபல நடிகை மரணம்!

1 week ago

அமெரிக்க தொலைக்காட்சி தொடர்களில், தாய் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்த ஜூன் லாக்ஹார்ட் வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.

அவருக்கு வயது 100. ஜூன் லாக்ஹார்ட்டின் தாய், தந்தை இருவரும் பிரபலமான நடிகர்கள். கடந்த 1938ம் ஆண்டு வெளியான ‘எ கிறிஸ்மஸ் கரோல்’ என்ற திரைப்படத்தில் தன் பெற்றோருடன் இணைந்து நடித்தார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர், தொலைக்காட்சி தொடர்களில் நீண்ட காலம் தாய் கதாபாத்திரத்தில் நடித்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.